வாவ்..! என்ன ஒரு குத்து! பொது இடத்தில் அமைச்சர் கருப்பண்ணன் போட்ட செம ஆட்டம்!

வரும் அக்டோபர் 21-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதியியை தேர்தல் பிரச்சாரம் கலைக்கட்டி உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அதிமுகாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் விக்கிரவாண்டி தொகுதியின் தேர்தல் பிரச்சாரத்தில் உற்சாகமாக நடனமாடும் வீடியோ காட்சிகள் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ மறைவு மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்த குமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், இரண்டும் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் கலைக்கட்டியுள்ளது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அவர்கள் செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அமைச்சர் கே.சி. கருப்பண்ணனுக்கு கிராம மக்கள் மேளம், தாளம் என உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மேள தாளத்திற்கேற்ப அமைச்சர் கருப்பண்னன் உற்சாகமாக நடனமாடினார். இதனை கண்டு அனைவரும் சுற்றுச்சூழல் அமைச்சருடன் சேர்ந்து நடனம் ஆடி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு திருவிழா போன்று கொண்டாடினார்கள். தற்போது மேள தாளத்திற்கேற்ப உற்சாக நடனமாடிய அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.