பிரபல நடிகையை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய அமைச்சர்! அசர வைக்கும் காரணம்!

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்.


சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தை பார்த்திருக்கிறார். பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக கூறி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். அப்போது, ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.