சசிகலாவுக்கு மிகவும் நெருக்கம்..! மிடாஸ் மோகன் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் மன்னார்குடி..!

ஜெயலலிதா தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த போது அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குடன் இருந்து வந்த மிடாஸ் மோகன் காலமானார்.


சசிகலா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மிடாஸ் நிறுவனத்துக்கும், 'மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், அடைமொழியில் மட்டும் மிடாஸ் இருக்கும். எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். சசிகலாவின் உறவு முறைக்குள் வராதவர். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் வேறு ஒரு சமுதாயத்தவர். இவரை, 'அடையார்’ மோகன் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.  

தென் சென்னையில் சுமார் 45 பார்கள் நடப்பது இவர் கண் அசைவில்தான். எந்த விவகாரமானலும், மிடாஸ் மோகனின் வலது, இடது கரங்களாக விளங் கும் இருவர்தான் தலையிடுவார்கள். வலதுகரம் - வடபழனி பஸ் நிலையம் எதிரில் ஒரு ஆபீஸ் நடத்தி வருகிறார். டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தவர் இன்று விமானத்தில் பறக்கிறார். ஒரு முறை சசிகலா தன்னிடம் இருந்த ஃபோர்டு ஐகான் காரை இவருக்கு விற்றார்.

அ.தி.மு.க. பிரமுர்களிடம் அந்தக் காரை காட்டி, 'சின்னம்மாவே எனக்குக் கொடுத்தார்' என்று பிளேட்டை மாற்றி தனது இமேஜை உயர்த்திக்கொண்டவர். அரசு வக்கீல் நியமனம், போலீஸ் டிரான்ஸ்ஃபர், கட்சிப் பதவி, உள்ளாட்சிப் பதவி என்று ஒவ்வொன்றுக்கும் இவரது தலையீடு உண்டாம்.

'மிடாஸ்’ மோகனின் இடதுகரம் - முன்னாள் அமைச்சரின் பி.ஏ. ஒருவராம். அரசாங்க ஃபைல்களை நுணுக்கமாக டீல் பண்ணும் விஷயத்தில் படு கில்லாடி.  மந்திரி களில் மூன்று பேர்களுக்கு அறிவிக்கப்படாத பி.ஏ-வாக இவர் செயல்பட்டவர். பலரும் கூறுவது போல் மிடாஸ் மோகன் சசிகலாவின் உறவினர் இல்லை.

இருந்தாலும் சசிகலாவின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்வடர். சசிகலாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். சசிகலா போயஸ் கார்டனில் இருந்து விரட்டப்பட்ட போது மோகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறக ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் இருந்து வந்தவர் தற்போது காலமாகியுள்ளார்.