திருச்சி: திருமணமான 40 நாளில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாணம் ஆகி 40 நாட்கள் தான்! தூக்கில் சடலமாக தொங்கிய பெண் டாக்டர்! நேரில் பார்த்து அதிர்ந்த தோழிகள்!
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்எஸ் படித்து வந்தவர் கயல்விழி. இவர், கடலூர் மாவட்டம், அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் ஆவார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியபடி, முதலாம் ஆண்டு எம்எஸ் படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவரது கணவரும் மருத்துவர்தான். அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார். திருமண விடுப்பு முடிந்து 40 நாட்களுக்கு பிறகு நேற்று தான் அவர் கல்லூரி திரும்பியுள்ளார். மணப்பெண் என்பதால் கூச்சத்துடன் இருப்பதாக கருதி இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தனி அறையில் இவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென நேற்று (ஆக.,24) அதிகாலை மாணவி கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்குதகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் புகார் கூறிவருகின்றனர். திருமணமான 40 நாளில் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டதும் ஆனால் அதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.