தகாத உறவு! குழந்தை! சல்லாபம்! கொலை மிரட்டல்! மறை மாவட்ட பிஷப் மீது இளம் பெண் கூறிய பகீர் புகார்!

மைசூரு மறைமாவட்டத்தைச் சேர்ந்த பிஷப் கே.ஏ.வில்லியம், செக்ஸ் மற்றும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.


மைசூரு மாவட்டத்தின் கத்தோலிக்க சமய பிரிவு தலைமையாக பிஷப் கே.ஏ.வில்லியம்  செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் மீது மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தேவலாயங்களில் பணிபுரியும் கத்தோலிக்க மதகுருக்கள் ஒன்று சேர்ந்து AOCC அமைப்பு சார்பாக போலீஸ் புகார் செய்துள்ளனர். பிஷப் வில்லியம் கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், நடத்தை கெட்ட அவர் நிறைய ஊழல் செய்கிறார் எனவும், அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 4 பெண்கள், பிஷப் மீது செக்ஸ் புகார் கூறியதாகவும், அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதவிர வில்லியமுக்கு 2 குழந்தைகள் உள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு பெண் உடன் ரகசியமாக குடித்தனமும் அவர் நடத்தி வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வில்லியம் உடன் சேர்ந்துகொண்டு மற்றொரு மதகுரு லெஸ்லி மோரிஸ் என்பவரும் செக்ஸ் ரீதியான தொல்லை செய்வதாக, ஒரு பெண் புகார் செய்திருக்கிறார்.    

  போலீஸ் புகார் அளித்த கையோடு, வாடிகன் தலைமைக்கும் இதுதொடர்பாக, 37 கத்தோலிக்க மதகுருக்களும் ஒன்று சேர்ந்து தங்கள் கைப்பட புகார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர். இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.