மே 30! இரவு 7 மணி! மோடி பதவியேற்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வரும் மே 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நேற்று டெல்லியில் கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி தன்னை ஆதரிக்கும் எம்பிக்களின் பட்டியலை அளித்தார். 

அத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையையும் குடியரசுத் தலைவரிடம் கூறினார் நரேந்திர மோடி. இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடியை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். பதவியேற்கும் தேதி மற்றும் மத்திய அமைச்சர்கள் தேர்வு செய்யும் பொறுப்பையும் மோடி உடனே அவர் படைத்தார்.

இந்த நிலையில் இன்று குஜராத் சென்ற பிரதமர் மோடி காந்தி நகரில் தனது தாயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் விழாவில் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

மோடியுடன் மத்திய அமைச்சர்களும் அன்றைய தினமே பதவி ஏற்கவுள்ளனர்.