மசாஜ் சென்டரில் இளம் பெண்ணை தகாத முறையில் டச் செய்த மசாஜ் கலைஞன்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

கனடாவில் மோன்க்டன் நகரைச் சேர்ந்தவர் பிளேயர் இவர் கடந்த 20 வருடங்களாக மசாஜ் தெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.


இதையடுத்து ஒருநாள் தன்னிடம் மசாஜ் செய்ய வந்த பெண்ணை முத்தமிட்ட தாகவும், அவர் உடைமாற்றும் சமயத்தில் அறையை விட்டு வெளியேறாமல் இருந்ததாகவும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பிளேயரிடம் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் பிளேயரின் முன்னாள் காதலி என்பதும், தற்போது அவர் வேறு ஒருவரை காதலித்து வரும் பட்சத்திலும் இவரோடு அவ்வபோது நெருங்கி பழகி வந்ததுள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும் இருவரும் நெருங்கி பழகி கொண்டிருந்த சமயம் என்பதால் பிளேயர் அப்பெண்ணிற்கு முத்தமிட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் ஆடை மாற்றும் போது அவர்  அறையில்  இல்லை என்று கூற  விசாரணை அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நீண்ட நேர விசாரணைக்குப் பின் தீர்ப்பை அதிகாரிகள் வெளியிட்டனர். அதில், பாதிக்கப்பட்ட நபர் பிளேயரின் காதலியாகவே இருந்தாலும் கூட பணி செய்கின்ற இடத்தில் பணியை தவிர்த்து இம்மாதிரியான ஒழுங்கீன செயலில் பிளேயர் ஈடுபட்டிருக்க கூடாது என்றும், ஆகையால் அவர் மீது பணி ரீதியிலான நடவடிக்கையாக 3 முதல் 9 மாதங்கள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் 5000 டாலர்கள் அபராதம் விதித்தும்  தீர்ப்பளித்தனர்.

மேலும்  அடுத்த மாதம் என்ன தண்டனை அளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு மசாஜ் தெரபிஸ்ட் தனது வாடிக்கையாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும், இதனால் தான் மக்கள் மசாஜ் சென்டரில் பாலியல் விடுதிகளாக கருதுகின்றனர் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.