நிறுத்துங்க நான் இப்போ 2 மாசம் கர்ப்பம்! திருமண வீட்டில் மாப்பிளையை நோக்கி கையை நீட்டிய இளம் பெண்! மணப்பெண் எடுத்த அசத்தல் முடிவு!

மதுரை மாவட்டத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தி நியாயம் கேட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது


மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முனியாண்டி என்பவருக்கும் பவித்ராதேவி என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகன் முனியாண்டி தாலி கேட்டும் நேரத்தில் நிறுத்தங்க என பெண் குரல் ஒன்று கேட்டது. இதனால் மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் குழந்தையுடன் இருந்த அந்த பெண்ணை பார்த்தனர். 

திருமணத்தை நிறுத்தியது ஏன் என உறவினர்கள் அந்த பெண்ணிடம் விசாரிக்க தன்னுடைய பெயர் ஈஸ்வரி என்றும் தான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து விட்டு சென்ற நிலையில் முனியாண்டியுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்ததால் ஒட்டு மொத்த திருமண வீட்டாருமே அதிர்ச்சி அடைந்தனர்.

இது மட்டுமின்றி தான் இப்போது 2 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்ட மணமகள் பவித்ரா தேவி வேதனை அடைந்தார். அவசரப்பட்டு ஒரு தப்பான நபரை தேர்ந்து எடுத்துவிட்டோம் என புழுங்கினார். ஈஸ்வரி சொன்ன விஷயங்கள் எதையுமே மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் முனியாண்டி.

இதையடுத்து திருமணத்தை ரத்து செய்தார் பவித்ரா தேவி. பின்னர் திருமணத்திற்கு ஆன செலவு தொகையை திருப்பி தருவதாக முனியான்டி வீட்டார் பவித்ரா வீட்டாருக்கு உறுதி அளித்தனர். இதை அடுத்து ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக முனியாண்டி கூறியதை அடுத்து பிரச்சனை சுமூகமாக முடிந்தது. திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது திருமண மண்டபங்களில்.