வங்கதேசத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் திருமண வீட்டார் உள்பட 10 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
படு பயங்கர வேகம்! கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்..! நொடியில் நேர்ந்த கோரம்! திருமண கோஷ்டி 10 பேர் பலியான கோரம்!
நேற்று பிற்பகல் வங்கதேச நாட்டில் முஷிகஞ்ச் பகுதிக்கு உட்பட்ட மாவா-டாக்கா தேசிய நெடுஞ்சாலையில், மினி பேருந்து ஒன்றில் திருமண வீட்டார் ரேணிகஞ்ச் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற மினி பேருந்து மீது எதிரே வந்த பேருந்து ஒன்று அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமுற்றது. இந்த கோர விபத்தில் திருமண வீட்டார் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு பயணத்திலும் நாம் பத்திரமாக சென்று இறங்கும்வரை நம்முடைய உயிருக்கு உத்தரவாதம் தருவது ஓட்டுநர்கள் மட்டுமே. அவர்கள் சற்றே கண் அயர்ந்தால் நாம் நிரந்தரமாக கண் அயரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.