மன்மோகன் சிங் தான் மீண்டும் பிரதமர்! ராகுல் திடீர் முடிவு! மே 21ல் அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் வெளிவர இரண்டு நாட்களுக்கு முன்னர், கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ராகுல் காந்தி. அவரது இந்த திடீர் கூட்டத்தை மோடியின் படை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.


தேர்தல் முடிவுகள் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி தருவதாக இருக்காது என்பதில் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே உறுதியாக இருக்கின்றன. அதனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம் என்று மாநிலக் கட்சியினர் அசட்டையாக இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் 21ம் தேதி கூட்டத்துக்கு ராகுல் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தின் ஒரே நோக்கம் மோடி பதவியில் அமரக்கூடாது என்பதுதான். அதற்காக தன்னுடைய பிரதமர் கனவை தள்ளிவைக்க இருக்கிறார் ராகுல்.

மே 21ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டிக்கு அருகே சீட்டுகள் கிடைத்தால், எங்கள் வேட்பாளராக மன்மோகன் சிங்கை அறிவிப்போம். குறைவாக கிடைக்கும் பட்சத்தில் கர்நாடகா பாணியில், அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்து வெளியே இருந்து ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அறிவிக்க இருக்கிறாராம் ராகுல்.

மீண்டும் மன்மோகன் சிங் என்பதை மோடி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் எந்த மாநிலக் கட்சியையும் பா.ஜ.க. அனுசரித்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் எப்படியேனும் மோடி இல்லாத அரசு அமைந்துவிடும் என்று இப்போது வட இந்தியாவில் நிலைமை மாறியுள்ளது என்கிறார்கள்.