வெளிநாட்டு கணவன் வந்ததால் ராணி என்னை கவனிக்கவில்லை! அதான் அப்படி செய்தேன்! 4 வயது இளைய கள்ளக் காதலன் பகீர் வாக்குமூலம்!

தூத்துக்குடியில் திருமணமாகி 5 வயது மகனும், கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் இளம் பெண் கள்ள காதலனால் கழுத்து அறுத்துக் கொலை.


கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மகாராணி( வயது 28) நடேஷன் ( வயது 36 ) இருவருக்கும் திருமணமாகி 5 வயதில் மகன் இருந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் அருகில் இருந்த வாலிபர் இளவரசன் தன்னை விட வயதில் இளையவன் ஆனாலும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த மகாராணி அடிக்கடி தனிமையில் எல்லை மீறியதாகவும் தெரிகிறது. 

கடந்த 4 ஆண்டுகளாக மகனை பள்ளிக்கு அழைத்து செல்வது, வீட்டு வேலைகள் என அனைத்திலும் உதவியாக இருந்த இளவரசன் மகாராணியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னதாக நாடு திரும்பிய நடேசன் மனைவியுடன் சந்தோசமாக இருக்க, மகாராணி காதலனை கண்டு கொள்ளவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த இளவரசன், மகாராணி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் நுழைந்து பிளேடால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டு தப்பித்து விட்டார். மேலும் போலீசார் தீவிர விசாரனை செய்வதை கண்டு பயந்தது, கடந்த 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.