ஆண் நண்பருடன் கெத்தாக காரில் வந்திறங்கிய இளம் பெண்! 2 பேருக்கும் வீட்டு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி! ஓமலூர் சம்பவம்!

ஓமலூர்: இளம்பெண்ணை காரில் டிராப் செய்த ஆண் நண்பரை சிலர் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிறன்று இவ்வூரை சேர்ந்த  இளம்பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் காரில் கொண்டு வந்து டிராப் செய்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞருடன் வாக்குவாதம் செய்ததோடு, ஒருகட்டத்தில் அவரை சுற்றி வளைத்து தாக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், அந்த இளைஞர் உடனடியாக காரை ஸ்டார்ட் செய்து தப்பிவிட்டார். ஆனால், போதாத நேரம் போல, போனவர் சில நிமிடங்களில் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு, மீண்டும் அதே பெண்ணின் வீட்டிற்கு வந்து, உறவினர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்த முறை ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத உறவினர்கள் உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து தாக்கினர்.

இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி ஒன்றில் பதிவான நிலையில், அதன்பேரில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரிக்கின்றனர். காரில் வந்து இறக்கிவிட்டது ஒரு குத்தமாடா என்கிற அளவுக்கு வெறித்தனமாக நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.