ரயில் பாதையில் வாக்கிங்..! தண்டவாளத்தில் சிக்கிய லுங்கி! அசுர வேகத்தில் வந்த ரயில்! பிறகு நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடி அருகே தண்டவாலத்தில் கைலி (Kylie) சிக்கியதால் ரயிலில் அடிப்பட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


தூத்துக்குடி சுந்தர்ராமபுரம் பகுதியை சேர்ந்த பாலகணேஷ் என்பவர், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டினை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அந்த நேரத்தில் பாலகணேஷ் கைலி தண்டவாளத்தில் சிக்கி உள்ளது. அவர் பதற்றத்தில் தண்டவாளத்தில் மாட்டிய கைலியை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் கைலியை எடுக்க முடியவில்லை, இதற்கிடையே தண்டவாளத்தில் முத்துநகர் விரைவு ரயில் மிகவும் வேகமாக அவரை மோதியது, ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலகணேஷ் உயிர் பிரிந்தது.

இந்த ரயில் விபத்தை குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான் உண்மை தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் பாலகணேஷுக்கு காது கேட்காது என்று, இதனை அறிந்து அனைவரும் அதிர்ச்சி உள்ளாகினர்.