நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் முன்னே சென்ற பேருந்தை முந்திச் சென் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அசுர வேகத்தில் பேருந்தை ஓவர் டேக் செய்த விபரீதம்! சடனாக குறுக்கே வந்த இளம் பெண்! நொடியில் இளைஞருக்கு ஏற்பட்ட பயங்கரம்!
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன் கோவில் நகரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சந்துரு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது சின்னத்தம்பிபாளையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.
முன்னே சென்ற பேருந்தை முந்திச் செல்வதற்காக வேகமாக தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தின் ஓரத்தில் வந்துள்ளார்.அப்போது எதிரே இருவாகனத்தில் வந்த பெண் ஒருவரின் மீது மோதியுள்ளார் இந்நிலையில் அந்தப் பெண்ணின் வாகனம் அதே இடத்தில் கீழே சரிந்து விழுந்தது இதையடுத்து சந்துருவின் வாகனம் ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.
தலையில் அடிபட்டு சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்சில் காயமடைந்த அந்த பெண்ணை ஏற்றிக் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.