நண்பர்களுடன் ட்ரிபிள்ஸ்! திடீரென சரிந்து விழுந்த பைக்! கீழே விழுந்தவரின் தலையில் ஏறி இறங்கிய லாரி! பதைபதைப்பு விபத்து!

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து வந்து கொண்டு இருந்த இரண்டு நபர்களில் ஒருவர் திடீரென வாகனத்திலிருந்து தவறி விழுந்து அருகில் சென்று கொண்டு இருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


கடலூரைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று முன்தினம் நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த வேளையில் குருவிநத்தம் தூக்குபாலம் அருகே சென்றனர்.  

இந்நிலையில், முருகன் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி கீழே விழ.யாரும் எதிர்பாக்கதா நேரத்தில், இருசக்கர வாகனதிற்கு எதிரே வந்த லாரியின் பின்சக்கரம் கீழே விழுந்திருந்தார் முருகன், அவர் மீது அந்த லாரி ஏறியுள்ளது.

லாரி ஏறியை நேரத்தில் அவர் உயிர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.