கள்ளக்காதலிக்கு இளைஞனுடன் கள்ளக் காதல்! கண்டுபிடித்த கள்ளக் காதலன்! பிறகு நேர்ந்த கொடூரம்!

சென்னை கண்ணகி நகரில் கள்ளக் காதல் செய்து வந்த பெண், வேறு ஒரு நபருடன் பழகியதால், ஆத்திரத்தில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலையை சேர்ந்த மலர் என்ற பெண், கணவரை பிரிந்து, சென்னையில் வசித்து வந்துள்ளார். தேனாம்பேட்டையில்  தங்கி மலர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது மேஸ்திரி முருகன் என்பவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  அதன் பின்னர் இருவரும் எழில் நகரில் வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருன் மீண்டும் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த முருகன், மலர் வீட்டு சென்று, வாக்குவாதம் செய்துள்ளார்.  அப்போது தனது விருப்பம் அப்படித்தான் இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேஸ்திரி தனது கள்ளக்காதலி என்றும் பாராமல் அம்மிக்கல்லை அவர் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

பிறகு வீட்டை பூட்டிவிட்டு முருகன் தப்பியுள்ளார். வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே உள்ளே சென்ற போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.