போதை மயக்கத்தில் 35 வயது பெண்! ஒதுக்குப்புறமாக இளைஞர் அரங்கேற்றிய தகாத செயல்! பிறகு நிகழ்ந்த விபரீதம்!

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரிடம் பாலியல் முறையில் சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் எப்போதுமே கூட்டம் அதிகமாகவே இருக்கும் இங்கு சென்னை மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று சற்று கூட்டம் அதிகமாக இருக்கும் போது பெண் பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணிற்கு சுமார் 35 வயது இருக்கும் நிலையில் அப்பெண்ணை மர்ம  நபர் ஒருவர் நீண்ட நேரமாக பின் தொடர்ந்துள்ளார். அதை அங்கிருந்த கடைக்காரர்கள் மற்றும் பயணிகள் நீண்ட நேரமாக கவனித்து வந்துள்ளனர். அந்தப்பெண் போதையில் தள்ளாடுவது போல நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த மர்ம ஆசாமி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது பின் தொடர்ந்து சென்று ஆசாமி அவரை காப்பாற்றுவது போல் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதை அங்கிருந்த மக்கள் பலர் பார்த்துள்ளனர் பின்னர் அங்கு கொண்டு சென்று பாலியல் முறையில் சீண்டல்கள் செய்துள்ளார் அப்பெண் அரை மயக்க நிலையில் இருப்பதால் தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். அதை பார்த்த பொதுமக்கள் மர்ம ஆசாமிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு ஒரு கூட்டம் கூடியது இந்நிலையில் தன் மனைவியை காணவில்லை என கணவர் பேருந்து நிலையத்திற்கு தேடி வந்துள்ளார். அப்போது அங்கு கூட்டமாக இருப்பதை பார்த்து அவர் உள்ளே சென்று பார்த்த போது தன் மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ந்தார்.

பின்னர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் மது போதையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனே அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று ஆட்டோ ஒன்றை பிடித்து வந்து மனைவியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் பொதுமக்கள் அந்த மர்ம நபரை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.