ஒரு தலை காதல்! இளம் பெண் டாக்டருக்கு ஏற்பட்ட கொடூரம்!

டெல்லியில் 25 வயது பெண் டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்த ஆண் டாக்டர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது போலீசார் தடுத்து கைது செய்தனர்.


டெல்லியில் ரஞ்சித் நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தனியாக வசித்து வந்தவர் 25 வயது கரீமா மிஸ்ரா. மருத்துவரான இவர் தனது குடியிருப்புக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் உடலின் அருகே ரத்தக் கறையுடன் சமையலறைக் கத்தி ஒன்று கிடந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கரீமாவுடன் வேலை செய்பவரும் கரீமாவின் பக்கத்து குடியிருப்பில் தங்கியிருக்கும் இரு டாக்டர்களில் ஒருவருமான சந்திர பிர்காஷ் வர்மா கரீமாவின் வீட்டுக்குள் வந்து சென்றது தெரிய வந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கரீமாவை சந்திரப் பிரகாஷ் ஒரு தலையாக காதலித்திரூக்கக் கூடும் என்று சம்பவத்தன்று தனது காதலை வலியுறுத்துவதற்காக கரீமாவின் குடியிருப்புக்குள் சென்ற நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து சந்திரப்பிரகாஷ் கரீமாவை ஆத்திரத்தில் கொன்று விட்டு தப்பியிருக்கக் கூடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்திரபிரகாஷை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் நெருங்கியதும் கால்வாயில் குதிக்க முயன்ற சந்திரபிரகாஷை தடுத்து கைது செய்துள்ளனர்.