மோடியை மிரட்டிப் பார்க்கும் மலேசிய பிரதமர்! மலேசியாவிலும் இப்படி ஓரு சட்டம் போடலாமா?

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்தியப் பிரதமருக்கு எதிராக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக்கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் சுதந்தரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?" என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ள கேள்வி உலக அரங்கில் எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாட்டில், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மகாதீர், ‘மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் சட்டத்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அப்படி ஒரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்னவாகும் என தெரியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஏற்கெனவே, காஷ்மீர் பகுதிக்குரிய அந்தஸ்தை ரத்து செய்த நேரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது இரண்டாவது முறை ஆகும். மலேசியப் பிரதமரின் வெளிப்படையான கண்டிப்பு, அண்டை நாடுகளில் மோடிக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் செல்வாக்கை குலைத்துவ்டும் என்று அஞ்சப்படுகிறது.