பிரபல மலையாள நடிகை தனக்கு திருமணம் நடைபெற போவதாக இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் திருமணம்..! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
மலையாளப் படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களில் நடிக்க வரும் கதாநாயகிகள் பிற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சில காலத்திற்குள்ளாகவே திருமண வாழ்க்கைக்குள் சென்று விடுகின்றனர். அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயர், காவியா, நஸ்ரியா பிரியாமணி, பவானி உள்ளிட்ட நடிகைகள் தமிழில் சில படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்திருந்த சமயத்தில் திடீரென திருமண வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் சென்றுவிடுகின்றனர்.
திருமணத்திற்கு பின்பும் அவர்களுக்கு பல படங்களில் நல்ல ரோல்கள் கிடைத்தும் ஒருசிலர் நடிப்பில் ஆர்வம் செலுத்தாமல் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தமிழில் கேணி படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியார் திருமண வாழ்க்கையில் இணைய போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனது நிச்சயதார்த்த புகைப்படத்தையும் இணையதளத்தில் பார்வதி நம்பியார் வெளியிட்டுள்ளார். இவர் மலையாளத்தில் சில படங்களிலும் தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்த போதிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரது திருமண தகவலை கேட்டதும் இவர் இனி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கியபடி உள்ளனர்.