ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா குடியரசு துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.


இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய வருடத்தின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குகிறது. இந்த இரவு முழுவதும் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும். இதனை அனைத்து மக்களுக்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக ஈஷா யோகா மையம் மஹா சிவராத்திரியை ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறது.