கொரோனா தலைமையிடமாக மாறியது மகாராஷ்டிரா..! காரணம் இவைதான்.

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா.


கடந்த மார்ச் 22ம்‌ தேசிய அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று நேர்மறையாக அதிகரித்துள்ளது, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மும்பையில் 116 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதனால் மஹாராஷ்டிராவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1018 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது, இதில் உயிரிழந்த ஒருவர் அமெரிக்காவிற்கு சென்று வந்ததாகவும். பாதிக்கப்பட்ட மீதமுள்ளவர்களின் பயண வரலாறு பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த வைரஸ் தொற்றுநோயிலிருந்து இதுவரை 79 பேர் குணமாகி உள்ளதாகவும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக மும்பையில் 642 பேரும். குறைந்தபட்சமாக கோலாப்பூரில் 2 பேரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் இதுவரை சுமார் 4800 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்.ஒரே மாநிலத்தில் மட்டும் ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் இந்தியாவின் வணிக சேவைகளை வழங்கி வரும் பொருளாதார தலைமையகம் என்று அழைக்கப்படும் மும்பையில் அதிகமாக இதன் பாதிப்புகள் உள்ளதால். அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.