செல்போன் மூலம் செக்ஸ் அழைப்பு! மதுரை இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

மதுரையில் பெண் ஒருவரை செல்ஃபோன் மூலம் பாலியல் உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்த முதியவருக்கு பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்.


மதுரை சிலைமானைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவருக்கு கடந்த சில மாதங்களாக மிகப்பெரும் தலைவலியாகவும் அடங்காத துயரமாகவும் இருந்தது ஒரு செல்போன் அழைப்புதான். அவ்வப்போது செல்போனின் அந்தப் பெண்ணை அழைத்த மர்ம நபர் தொடர்ந்து பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்தாகக் கூறப்படுகிறது. 

தொடக்கத்தில் தான் மட்டுமே போராடியும் திட்டியும் பார்த்த பெண் அந்த நபர் சற்றும் அடங்காததை அடுத்து உறவினர்களிடம் விவகாரத்தைத் தெரிவித்தார். அவர்களின் யோசனைப் படி அந்த நபரின் ஆசைக்கு இணங்குவதாகவும் நேரில் வருமாறும் அந்தப் பெண் அழைப்பு விடுத்ததையடுத்து அந்த நபர் நேரில் வந்தார்.

ஆனால் அதிர்ச்சி - அந்த நபர் ஒரு பக்குவமற்ற முதியவர் எனத் தெரிய வந்தது. முதியவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள், அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என தெரியவந்தது.