எங்கடா ஓடுறீங்க? அடுத்தடுத்து 3 பேர் மீது பாய்ந்த கொடூர புலி..! அதிர வைக்கும் வீடியோ உள்ளே!

மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்றை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கற்களை கொண்டு புலியை விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மகாராஷ்டிரா-மத்தியப் பிரதேச எல்லையில் கடந்த சனிக்கிழமை நண்பகல், கிராமப்பகுதியில் திடீரென புகுந்த புலி ஒன்று அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் மீது பாய்ந்தால் கிராமத்தை சேர்ந்த ஷங்கர் துர்கர் , சோட்டேலால் தக்ரே மற்றும் வீரேந்திர சஹாரே என்கிற மூன்று பேரை பங்கரமாக புலியால் தாக்கப்பட்டனர். பின்னர் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரையும் பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் வனத்துறை அதிகாரிகள் யாரும் இல்லை புகார்களும் எழுப்பிய வண்ணம் உள்ளது. மேலும், புலியை விரட்டுவதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கற்களை கொண்டு வீசி புலியை விரட்டியடித்துள்ளனர். மேலும், இந்த மாதரி சம்பவம் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டம் பிரம்மபுரி வனப் பிரிவில் வெள்ளிக்கிழமை மாலை 42 வயது பெண் ஒருவர் புலியால் கொல்லப்பட்ட மறுநாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சமூக வளைதளங்களில் புலி தாக்கும் காட்சிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து புலியை கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர்.