அழகிய பெண்ணாக மாறி ஆண் நபரை திருமணம் செய்த ஆண் நபர்..! 4 மாதத்தில் தெரிய வந்த உண்மையால் ஏற்பட்ட விபரீதம்!

பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து, மற்றொரு நபரை திருமணம் செய்துகொண்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பலாக் திவாரி. இவர் பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் ரோஹித் என்ற நபரையும் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் திருமணமாகி நான்கு மாதங்களே ஆகின்றன.  

இந்நிலையில் பலாக் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்த போது, அறுவை சிகிச்சையில் தவறு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. பலாக்கிற்கு சிறுநீரக பகுதியிலும் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது.  

இதனால் வலியும் வேதனையும் அனுபவித்து வந்த பலாக் திடீரென நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பலாக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், பலாக் செய்துகொண்ட பாலினஅறுவை சிகிச்சையில் தவறு நடந்து இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் தற்கொலைக்கான முழு காரணம் தற்போது வரை தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.