திமுகவை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு இது தான் கதி! வின் டிவியில் இருந்தும் விரட்டப்பட்ட மதன்..!

பிரபல பத்திரிகையாளர் மதன் வின் டிவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உச்சத்தை தொட்ட பத்திரிகையாளர்களில் மிக முக்கியமானவர் மதன் ஆவார். இவர் நடத்தும் வித்தியாசமான நேர்காணலின் மூலம் குறைந்த காலத்திலே இவர் பிரபலமானார். காவிரி தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த இவர் அரசியல்வாதிகளை நேர்காணல் நிகழ்ச்சியில் தனது கேள்விகள் மூலம் திணறடித்தார். ஒரு நேர்காணலில் சுப வீரபாண்டியனை தனது கேள்விகளின் மூலம் மதன் திணற வைத்தார். இதன் காரணமாக காவிரி தொலைக்காட்சிக்கு பெரியாரிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்தன. இதன் காரணமாக காவிரி தொலைக்காட்சியில் இருந்து அவர் வெளியேறி வின் தொலைக்காட்சியில் இணைந்தார்.

சாட்டிலைட் சானல்களுல் ஒன்றான வின் டிவி மதனின் வருகைக்குப் பின்னர் அவர் நடத்தும் விவாத நிகழ்ச்சிகள் மூலமாக அதிகம் பேரால் பார்க்கக்கூடிய சேனலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மதன் தன்னுடைய விவாத நிகழ்ச்சிகளை தனி பாணியில் நடத்தி அரசியல்வாதிகளை விமர்சித்து வந்தார். அந்தவகையில் குறிப்பாக கிஷோர் கே ஸ்வாமி பங்குபெறும் விவாதங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று தந்தன. இதனால் அந்த தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் அதிகமாகிக் கொண்டே வந்தனர்.

இந்நிலையில் அந்த தொலைக்காட்சியில் புதிதாக வேலைக்கு சேர்ந்த உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மூலம் மதனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் மூலமாக மதனுக்கு கிடைத்து வந்த ஒத்துழைப்பு மிகவும் குறைந்து வந்தது. ஒரு கட்டத்தில் மதன் இல்லாமல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு அவர்கள் தொலைக்காட்சியை கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் வின் தொலைக்காட்சியில் இருந்து மதன் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.