உதயநிதியை வம்புக்கு இழுக்கும் மரியதாஸ்! பாபர் மசூதி இடிப்பு பேசுவாரா?

பா.ஜ.க.விடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஒற்றைப் போராளி போன்று இயங்கிவருபவர் மாரிதாஸ்.


சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் பொருளாதாரம், அரசியல், நிர்வாக கருத்துக்களில் சந்தடி சாக்கில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை மட்டும் செமையாக கவனிப்பார். அவர் இப்போது நேரடியாக உதயநிதியை வம்புக்கு இழுத்திருக்கிறார். அதாவது ஏதாவது ஒரு விவாதம் குறித்து மாரிதாஸுடன் உதயநிதி விவாதத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த அயோக்கியத்தனத்தை 100% அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பேச மாரிதாஸ் தயாராக இருக்கிறாராம். அதனால், உதயநிதி அடிப்பொடிகள், சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு குடும்பத்தின் அடிமை உடன் பிறப்புகள் எவருக்கும் நான் தனித் தனியே பதில் கொடுக்க விரும்பவில்லை. நான் இப்போதும் கூறுகிறேன் லாட்டரி மார்டீன் -விவகாரத்தை எடுத்துப் பேசினால் மொத்த சென்னையும் காறித் துப்பும் அளவிற்கு நான் ஆதாரங்களை மக்கள் முன் வைத்து விவாதம் செய்யத் தயார். வேண்டும் என்றால் உங்கள் அடிமை ஊடகங்களையும் அழைத்து வாருங்கள் ஒரு பொது மேடையில் சந்திக்கலாம்.

நான் தமிழ் அது இது என்று எல்லாம் பேச விரும்பவில்லை நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ன கொள்ளை அடித்தார்கள் என்று பேச விரும்புகிறேன். சரியா? எனவே வரும்போது உங்கள் பினாமி விசயங்களையும் எடுத்து வைத்து கொண்டு விவாதம் வரவும். நடுவராக. வேண்டுமானால் உங்கள் உலக வியாக்கிதம் பேசும் கம்யுனிஸ்ட் கட்சியினரை வைத்து கொள்வோம் நடுவராக. வெக்கம் கெட்ட கம்யுனிஸ்ட் கட்டாயம் முட்டுகொடுக்க வருவர்.

குழப்பமாக இருந்தால் நீதாண்டா லூசு புகழ் அருணன் அவர்களை அழைத்துக்கொண்டு வரவும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அடேங்கப்பா, மாரிதாஸ்க்குத்தான் எத்தனை தைரியம். முதலில் ராமஜென்ம பூமி, கோத்ரா ரயில்  எரிப்பு போன்ற பா.ஜ.க.. அட்டூழியத்தைப் பேசிவிட்டு அதன்பிறகு தமிழ்நாட்டு விவகாரத்துக்கு வரலாம் என்று தி.மு.க.வினர் பதில் போட்டு வருகிறார்கள்.