தமிழாற்றுப்படையை தமிழ்ப்பாடை என்று உலறிய மு.க.ஸ்டாலின்! அதிர்ந்து அமர்ந்த வைரமுத்து!

வைரமுத்து எழுதிய நூல்களை தொகுத்து தமிழாற்றுப்படை என்கிற பெயரில் நூல் மற்றும் ஒலி நாடா வெளியீட்டு விழா நடைபெற்றது.


இந்த தொகுப்பை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். புத்தக தொகுப்பின் ஒலி நாடாவை வைகோ வெளியிட்டார். ஒய்வு பெற்ற நீதிபதி விமலா ஒலி நாடாவை பெற்றுக் கொண்டார்.  

நிகர்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வைரமுத்துவுக்கு இணையான கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. கவிப்பேரசு இப்போது உரைப் பேரரசாகியுள்ளார். வைரமுத்து நெஞ்சில் எப்போதும் கலைஞர் இருப்பார். அது எனக்கு தெரியும். 

இந்த தமிழ்பாடை நூல் மூலம் என்று ஆரம்பித்தவர் பின்னர் சரி செய்து கொண்டு தமிழாற்றுப்படை நூலின்மூலம் என்று கூறினார். தமிழாற்றுப்படை நூல் வெளியிடும் வாய்ப்பை பெற்றது என் வாழ்நாளில் என்றென்றும் மறக்க முடியாது. 

கலைஞரின் மாணவர்களுக்கான பண்பைப் பெற்றவர் வைரமுத்து. தமிழாற்றுப்படை சரியான நேரத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் வட மொழி ஆதிக்கத்திற்கு முயற்சி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் வைரமுத்துவீன் நூல் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. 

இவ்வாறு ஸ்டாலின் பேசினார். வழக்கம் போல் இந்த முறையும் தமிழாற்றுப்படை என்பதை தமிழ்ப்பாடை என்று ஸ்டாலின் கூறியதால் விழாவிற்கு ஏற்பாடு செய்த வைரமுத்து அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார். கூட்ட அரங்கிலும் சலசலப்பு ஏற்பட்டது.