காதலர்கள் சல்லாபிக்கும் ஹாட் ஸ்பாட் ஆன வேலூர் கோட்டை..! பட்டப்பகலில் வெட்ட வெளியில் அந்தரங்க சேட்டைகள்!

வேலூர் கோட்டைக்குள்ளாக அத்து மீறும் காதல் புள்ளிங்க கண்டுக்கொள்ளாமல் மவுனத்திருக்கும் காவல் துறை.


வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கோட்டை பழங்கால ராஜ கோபுரங்களை கொண்டது மேலும் திப்பு மகால், ஜலகண்டேஷ்வரர் கோவில் என பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் உள்ளன.வெளி நாட்டினர்கள், பள்ளி குழந்தைகள் என எல்லா நேரமும் கூட்டமாக காட்சி அளிக்கும் இடம் தான் வேலூர் கோட்டை.

இந்த நிலையில் அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் காதல் ஜோடிகள் அத்து மீறுவதும், காதல் லீலைகளில் ஈடுபடுவதும், காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. கோட்டையில் இண்டு இடுக்களில் கூட காதலர்கள் ஆபாச அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த பொது மக்கள் இது குறித்து பல முறை காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளத்காக கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வுக்காக வந்த போதும் கூட, கொஞ்சமும் அசராமல் அங்கு காதலர்கள் ஆபாச லீலைகளில் ஈடுபட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது