காருக்குள் நிர்வானமாக கிடந்த காதலன் - காதலி சடலங்கள்! சேலம் செவ்வாய் பேட்டையில் பரபரப்பு!

சேலம் அருகே காணாமல் போன காதல் ஜோடியின் உடலை அங்குள்ள கார் ஷெட் ஒன்றில் காவல்துறையினர் நிர்வாணமாக உள்ள நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரம் செய்து வருபவர் கோபி இவரது மகன் சுரேஷ் இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் அவருடன் படிக்கும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜோதிகா இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது காதல் பெற்றோரின் வீட்டுக்கு தெரியவர இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜோதிகாவின் தந்தையும் அதே பகுதியில் வெள்ளை வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதையடுத்து ஒரு நாள் சுரேஷ் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை கோபி காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதேசமயம் ரவி என்பவர் தனது மகளை காணவில்லை எனவும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சுரேஷிற்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் சோதனையிட்டபோது அதில் சுரேஷ் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் காரின் உள்ளே நிர்வாணமாக இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்