தங்கைக்கு காதல் தொல்லை! அமமுக பிரமுகரை சம்பவம் செய்த சகோதரன்!

திருச்சியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த அமமுக கட்சி பிரமுகரை சகோதரன் கொலை செய்துள்ளார்.


திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஜாவித் உசேன் என்பவர் அமமுகவின் பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார். அதே ஊரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். 

ஆனால் உசேனின் காதலை அந்த மாணவி நிராகரித்துள்ளார். இருந்தாலும் விடாமல் அந்த மாணவியை பின்தொடர்ந்து உசேன் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தனது சகோதரர் கமலக்கண்ணனிடம் மாணவி கூறியுள்ளார்.

ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற கமலக்கண்ணன் தனது நண்பன் சரவணன் என்பவனை சேர்த்துக் கொண்டு உசேனிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து உசேன் மீது கமலக்கண்ணன் கொலை வெறியில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உசேன் தனியாக செல்லும் போது பின்தொடர்ந்து சென்ற கமலக்கண்ணன் மற்றும் சரவணன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பான புகாரில் கமலக்கண்ணன் மற்றும் சரவணனை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.