முதலமைச்சர் சென்ற வாகனத்துடன் வந்த பாதுகாப்பு வாகனங்களிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் ஒன்றரை கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் வாகனத்திலிருந்து கட்டுக்கட்டாக பணம்! பறிமுதல் செய்து தூள் கிளப்பிய தேர்தல் பறக்கும் படை!

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இன்று பெமா கண்டு என்பவர் முதலமைச்சராக இருந்து வருகிறார். இன்று அருணாச்சல் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மோடியின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வழிமறித்தனர். இதனால் மிரண்டு போன முதலமைச்சர் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அதற்குள் முதலமைச்சர் கண்டு பின் வாகனங்களுடன் வந்த பாதுகாப்பு வாகனம் ஒன்றில் இருந்து சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதலமைச்சர் வாகனம் என்று தெரிந்தும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் துணிந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அதேசமயம் முதலமைச்சரின் வாகனத்தோடு சென்ற வாகனத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் இருந்தது என்றால் அதற்கு முதல்-அமைச்சர் தான் பொறுப்பு என்று எதிர்க் கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.