காதலியை கொன்று உடலை சமைத்து தின்ற கொடூர காதலன்! அதிர வைக்கும் சம்பவத்தில் திடுக் திருப்பம்!

பிரிட்டன் தலைநகரம் லண்டனில் காதலியை துண்டு துண்டாக வெட்டி மாமிசம் போல் தின்ற நபர் சுமார் 15 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பின்னர் மீண்டும் குடியேறியதால் அங்குள்ள அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.


சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளைச் சம்வங்களில் தொடர்புடைய பிரிட்டன் நாட்டை சேர்ந்த பால் டூரன்ட் என்பவர் ஸ்பெயினில் தலைமறைவாக இருந்துள்ளார்.  அப்போது அங்கே கரேன் டூரல் என்ற பெண்ணை சந்தித்து காதல் வயப்பட்ட அவர் தனது காதலை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

தானும் ஆதரவற்ற நிலையில் இருப்பதைலும் ஒரு நல்ல கணவன் கிடைப்பதாகவும் கருதிய கரேன் டூரல் என்ற அந்தப் பெண்ணும் காதலை ஏற்றுக்கொண்டு அவருடன் லண்டனில் வாழ்ந்து வந்துள்ளார்.

திடீரென ஒருநாள் இருவரும் குடியிருந்து வந்த வீட்டில் ரத்த அடையாளங்கள் உள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்த லண்டன் போலீசார் அங்கு மாமிசத் துண்டுகளும் கத்தியும் இருப்பதை பார்த்தனர். மேலும் வீட்டில் இருந்த காதலி எங்கே என போலீசார் துருவி துருவி விசாரிக்க கேட்க காதலியை கண்டம் துண்டமாக வெட்டி மாமிசம் போல் தின்று விட்டதாக சர்வ சாதாரணமாக பால் டூரண்ட் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது லண்டன் நீதிமன்றம். காதலியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையான பால் டூரண்ட்டை அவர் மீது ஏற்கனவே நிலுவையில் இருந்த கொள்ளை வழக்குகளை தூசி தட்டி எடுத்த போலீசார் அவருக்கு மீண்டும் தண்டனை வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பின்னர் கொள்ளை வழக்கிலும் தண்டனை அனுபவித்து விட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து லண்டனில் தான் ஏற்கனவே தங்கயிருந்த குடியிருப்பில் வசிப்பதற்காக வந்தபோது அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். மனிதர்கள் விலங்குகளை மாமிசமாக சாப்பிடும் நிலையில் கூட வாழ்ந்த காதலியையே மாமிசமாக தின்ற அந்த நபரால் தங்கள் குடும்பத்தினருக்கும் பாதிப்பு வருமோ என்று அப்பகுதி மக்கள் பயத்தை தெரிவித்துள்ளனர்.