உடல் எடையை குறைக்க விபரீத ட்ரீட்மென்ட்..! முதலில் மகிழ்ந்த பெண்ணுக்கு பிறகு ஏற்பட்ட பரிதாப சம்பவம்!

லண்டன்: வயிற்றில் தொள தொளவென தொங்கிய தோல் மடிப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளார்.


பிரிட்டனில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷைர் - ஹெட்னிஸ்ஃபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீப் ஓ ஷியா. 28 வயதான இவர் உடற்பருமன் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக, அறுவை சிகிச்சை செய்து வீணாக உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற தீர்மானித்தார்.

இதன்படி, 100 கிலோ வரை எடை குறைத்தார். ஆனாலும், அவருக்கு ஒரு குறை ஏற்பட்டது. ஆம், கொழுப்பை அகற்றிவிட்டாலும், அவரது வயிற்றுப் பகுதியில் உள்ள தோலின் தடிமன் குறையவில்லை. வயிறு, இடுப்பைச் சுற்றி டயர் போல தொள தொளவென வெறும் தோல் காணப்பட்டது. சிக்ஸ் பேக் வைத்திருக்கும் காலத்தில் 6 டயர்களை வயிற்றில் கட்டியது போல காணப்பட்டார்.

இதனால் தனது இடுப்பு அழகு கெட்டுவிட்டதாக வேதனைப்பட்ட ஸ்டீப் ஓ ஷியா, அதனையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானித்தார். இதன்படி, டயர் போல தொங்கிய தோல் பகுதியை அவர் நீக்கிவிட்டார்.  தற்போதுதான் சிக்கென்ற இடுப்பை பெற்றுள்ளதாகவும், மனதில் உள்ள பாரமே குறைந்தது எனவும் ஷியா மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.