நீ என் மனைவி! எனக்கு உரிமை உள்ளது! பாலியல் வேட்டையாடிய கணவன்! பிறகு நேர்ந்த அதிரடி சம்பவம்!

லண்டன்: மனைவியின் சம்மதமின்றி அவரை பலாத்காரம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.


இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, தி சன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட ஆண் மற்றும் பெண் இருவரின் பெயர் வெளியிடப்படவில்லை. கடந்த 2015ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், முதலிரவில், தனது கணவர் தன்னை கடுமையாக சித்ரவதை செய்ததாக, அப்பெண் தி சன் ஊடகத்திற்கு கூறியுள்ளார்.  அதாவது அனுமதியின்றி அடிக்கடி பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக அவர் செய்ததால், கணவன் என்றும் பாராமல் அவர் மீது போலீசில் புகார் அளித்ததாகவும், இதன்பேரில், அந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் நிகழ்ந்து, 4 ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அப்பெண்ணின் கணவன், மீண்டும் நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். கடந்த மாதங்களாக, அவருக்கு 4000 மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்த அவர், ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் வசிப்பிடத்திற்கே நேரில் சென்று, அனுமதியின்றி, அவரை பலாத்காரம் செய்திருக்கிறார்.

மறுபடியும் இதுபற்றி அப்பெண் போலீசில் புகார் அளிக்க, அவர்கள் கைது செய்தனர். இப்படி பல முறை சொல் பேச்சு கேட்காமல், தனது மனைவியை சம்மதம் கேட்காமல் பலாத்காரம் செய்த அந்த காமக்கொடூர கணவனுக்கு, தற்போது 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.