தினகரனுக்கு சின்னம் ஒதுக்கியாச்சு, என்னன்னு தெரியுமா?

கடவுளின் தீவிர பக்தன் ஒருவனுக்கு லாட்டரி சீட்டில் பரிசு வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.


அதற்காக இரவும் பகலுமாக கடவுளுக்குப் பூஜை செய்தான். சாப்பிடாமல் தூங்காமல் கஷ்டப்பட்டு இறைவனைக் கும்பிட்ட பக்தனுக்கு ஒரு நாள் பொறுமை போய்விட்டது. கடவுளிடம், ‘நான் செய்யும் பூஜையில் என்ன குறை கண்டாய், ஏன் எனக்கு லாட்டரி சீட்டில் பணம் விழவே இல்லை’ என்று கேட்டான். 

கடவுளும் டென்ஷனாகி, ‘ஏண்டா லூசுப் பயலே... நீ லாட்டரி சீட்டே வாங்காம எப்படி பரிசு விழும்’னு கேட்டாராம். அந்தக் கதைதான் குக்கர் கேட்டு தினகரன் உச்ச நீதிமன்றம் போய் நின்னது. கட்சியை பதிவு செஞ்சு சின்னத்தை வாங்குங்கன்னு சொல்லிடுச்சு. ஆனாலும், பரிதாபப்பட்டு ஏதேனும் ஒரு பொதுச்சின்னம் ஒதுக்க முடியுமான்னு பார்க்கச் சொல்லியிருக்கு.

இப்போது தினகரன் பொது சின்னத்தில் அவருக்கு என்ன வேணும்னு தேடி முடிச்சுட்டாராம். ஆம், அவருக்கு சிலிண்டர் சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். குக்கரைப் போன்று இதுவும் குடும்பப் பெண்கள் மனதை தொடும் என்று நினைக்கிறார்.

அதனால் சிலிண்டர் ஆசையை ரகசியமாக மேலிடத்துக்குத் தெரிவித்து முடிவுக்காக காத்திருக்கிறார். வீட்டில் சிலிண்டர் எக்ஸ்ட்ரா இருந்தா பார்த்து வைச்சுக்கோங்க, தினகரன் ஆட்கள் வந்து தூக்கிட்டுப் போயிடுவாங்க.