குறைந்த விலைக்கு வரும் பங்குகள் பட்டியல்! உஷாரா இருந்துக்கோங்க!

சில நல்ல தரமான பங்குகள் அசாதாரணமான‌ சூழ்நிலையின் காரணமாக மிக குறைந்த விலையில் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது,


அப்படி மோசமான கடன் மற்றும் NPA சிக்கல்கள் காரணமாக சில குறிப்பிட்ட பங்குகளின் விலை கடந்த 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால குறைந்த விலையை எட்டியுள்ளன. அப்படிப்பட்ட சில பங்குகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது,

யெஸ் பேங்க்:- யெஸ் வங்கி பங்குகள் 10 ஆண்டு கால குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது, கடைசியாக கடந்த திங்கட்கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் ரூ .33 க்கு வர்த்தகமாகியது.

கடந்த வார தொடக்கத்தில் இந்த வங்கியின் பங்கு விலை கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 23 சதவீதம் சரிந்தது. விளம்பரதாரர்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக வங்கியில் தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர், இது யெஸ் வங்கியின் பங்குகளில் உள்ள சிக்கல்களை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்த பங்குக்குளை வாங்க இது ஒரு நல்ல சமயம் என்றாலும் குறுகிய கால சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை தவிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் சில நிறுவனங்கள் இந்த பங்குகளை வாங்க பரிந்துரைக்கும்போது அது மேலும் கீழ் மட்டங்களை நோக்கியேச் செல்கிறது. சமீபத்தில் யெஸ் வங்கியின் மூலதனத்தை அதிகரிக்க வங்கி சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு கடந்த திங்களன்று ஒரே நாளில் 10 ரூபாய் உயர்ந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாபுல்ஸ் பங்குகள்:-  இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (செபி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, இந்தியா புல்ஸ் வீட்டுவசதி நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால குறைந்த விலைக்கு சரிந்தன. 

நிறுவனத்தின் மீது வெளியிடப்பட்ட பல எதிர்மறையான செய்திகளால் அது இந்நிறுவனத்தின் பங்குகள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. லட்சுமி விலாஸ் வங்கியில் உள்ள சிக்கல்கள், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பங்குகளின் வீழ்ச்சியிலும் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்நிறுவனம் லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ என்டர்டெயின்மென்ட்டில்:-  ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால குறைந்த விலையை எட்டி வர்த்தகமாகி வருகிறது, நிறுவனத்தின் கடனைத் திருப்பிச் செலுத்துதல்.

குழு நிறுவனங்கள் நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்த கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவும், மேலும் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்கள் பங்குகளை விற்கவோ அல்லது பிற சொத்துக்களை விற்று கடனை செலுத்தவோ செய்யாவிட்டால், பங்குகள் தொடர்ந்து நஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பரஸ்பர நிதிகள் மற்றும் உறுதிமொழி பங்குகளை விற்றது, இதன் விளைவாக பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால வீழ்ச்சியாக NSEயில் 216 ருபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்:- இது 5 ஆண்டு குறைந்த நிலையில் இல்லை என்றாலும்,இந்த பங்குகள் கடந்த 3 ஆண்டு வர்த்தகத்தில் குறைவான அளவில் வர்த்தகமாகி வருகிறது. வலுவான முதலீட்டாளர்கள் காரணமாக இந்நிறுவனம் என்.பி.எஃப்.சி துறையில் உள்ள எதிர்மறையான தாக்கங்களை எளிதில் கடந்து செல்கிறது.  

மேலும் இந்தியாவில் உள்ள வீட்டு வசதி கடன் நிறுவனங்களில் மிக வலுவான வீட்டு நிதி நிறுவனமாக உள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக இந்த பங்குகளின் விலை கீழே நோக்கி செல்வதைக் காண முடிகிறது.

மேலும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்.கிளென்மார்க்.ஓஎன்ஜிசி.என்எம்டிசி.டாடா பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடந்த பத்தாண்டு கால வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி திங்களன்று நடைபெற்ற வர்த்தகத்தில் சுமார் 113 பங்குகள் NSEயில் 52 வார வீழ்ச்சியை தொட்டன.

குறிப்பாக, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஸ்பைஸ்ஜெட், ஜிஆர்பி, எடெல்விஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ், லூபின்,அம்புஜா சிமென்ட்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், அலகாபாத் வங்கி, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் பேப்பர் ஏபிபிஎம் ஆகியவையும் என்எஸ்இ யில் 52 வார குறைந்த விலையைத் தொட்ட பங்குகளில் இடம்பெற்றுள்ளது.

நிஃப்டி இண்டெக்ஸ் 50 குறியீட்டில், யெஸ் வங்கி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை விலை உயர்ந்தும். இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜீ என்டர்டெயின்மென்ட், பிபிசிஎல், இண்தஸ்இண்ட் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை கடந்த திங்களன்று வர்த்தகத்தில் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.

மேற்கூறிய இந்த தரமான பங்குகள் மற்றும் வங்கித் துறையில் உள்ள பங்குகள் தங்களது சிக்கல்களை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யாவிட்டால், குறிப்பிட்ட இந்த பங்குகள் வீழ்ச்சியில் இருந்து மீட்கப்படுவதைக் காண்பது அரிது என்றே‌ தோன்றுகிறது. மேலும் குறுகிய கால முதலீடுகள் இந்த பங்குகளை தவிர்த்து மற்ற பங்குகளில் தங்களது முதலீடுகளை செய்ய ஆயத்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி.