லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

வேலைக்குச் செல்லும் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது சகஜம். இந்த லிப்ஸ்டிக்கில் இதயத்தைப் பாதிக்கும் அபாயம் ஒளிந்திருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.


* லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளைக் குறைப்பதாகத் தெரிவித்து உள்ளார்கள்.

* எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இதயச் செயல்பாடுகளை முடக்கி உள்ளது.

* இதயம் நல்ல நிலையில் இயங்குபவர்களைவிட, இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிக்கல் உருவாகும் என்கிறார்கள்.

லிப்ஸ்டிக்கில் மிகமிக குறைந்த அளவே டிரைக்ளோசன் இருப்பதாக அழகுப் பொருட்கள் நிறுவனங்கள் இந்தப் பாதிப்பை மறுத்தாலும், பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதை குறைப்பதே நல்லது.