எத்தனை கோடி பிடிச்சாலும் பரவாயில்லை! தேனியை விட்ருங்க! ஓ.பி.எஸ். கதறல்!

தேர்தல் நெருங்கிடுச்சி, இனிமேல் வருமான வரித் துறையால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கருதப்பட்ட நிலையில், திடீரென தூத்துக்குடியில் கனிமொழி வீட்டிலும் தேனியில் அ.ம.மு.க. இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பணம் பிடிபடவில்லை.


ஆனால், அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகத்தை வருமான வரித்துறையினர் சோதனையிட நெருங்கியதுமே கடுமையாக எதிர்ப்பு காட்டப்பட்டது.  உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்கவே வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. உடனே கும்பல் அனைவரும் கலைந்துசென்றனர்.
இதையடுத்து விடியவிடிய நடைபெற்ற சோதனையில் பண்டல்பண்டலாகப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த இடம் அ.ம.மு.க. நிர்வாகிக்கு சொந்தமானதுஎன்றும்94 பண்டல்களில் இருந்த சுமார் 1.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கு கைப்பற்றப்பட்ட பணத்தில் பல்வேறு நிர்வாகிகள் பெயர், முகவரி எழுதி வைக்கப்பட்டு இருந்ததால், வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் என்று உறுதியாகியுள்ளது. இதேபோன்று வேலூரில் பிடிபட்ட காரணத்தால்தான் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தேனியிலும் தேர்தலை நிறுத்தலாமா என்று ஆணையம் யோசனை செய்துள்ளது.
இதைக் கேள்விப்பட்டு மிரண்டு விட்டாராம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயிக்கப்போறோம்னு ஏகமா செலவழிச்சாச்சி, இப்போ நிப்பாட்டுனா திரும்பவும் பணம் செலவழிக்கணும், கட்டுப்படியாகாது. எத்தனை கோடி பிடிபட்டிருந்தாலும் பரவாயில்லை,தேர்தல் நடக்கட்டும் என்று கெஞ்சுகிறாராம்.
எங்களிடம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கைவிரிக்கவே, வழக்கம்போல் டெல்லி மேலிடத்தை அணுகி கதறுகிறாராம். நடக்கட்டும், நடக்கட்டும்.