ரஜினியின் தளபதியாம் லாரன்ஸ்! சீமானுடன் மோதுவதுதான் வீரமா?

தர்பார் ஆடியோ ரிலீஸின் போது மேடையேறி ரஜினியை வாழ்த்துவதாக நினைத்து, கமல்ஹாசனை காலி செய்தவர்தான் லாரன்ஸ்.


லாரன்சின் சாணி பேச்சு கடுமையான பின்விளைவுகளை உருவாக்கியது. அதேபோல் மேடையில் சீமானுக்கு சவால் விட்டுப் பேசினார். ரஜினி பிறந்த நாள் விழாவில் நேரடியாகவே சீமானை மேடையில் ஏறி பேசி சவால் விட்டுள்ளார். நாங்கள் எல்லாம் அமெரிக்காவுக்குப் பிறந்தவர்களா என்று ரஜினி ரசிகர்களின் பிறப்பையே சந்தேகப்படுத்தியுள்ளார் லாரன்ஸ். நான் ஆம்பிள்ளைதான் என்று ஒரு வழியாக சீமானின் பெயரை மேடையில் சொல்லி இருக்கிறார்.

இப்போது வரும் சந்தேகம் இதுதான். ரஜினிகாந்த் ஒரு வேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால், அவரது எதிரி ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமிதானே? அதைவிட்டு தேவை இல்லாமல் சீமானை முறைத்துக்கொள்வது ஏன்?

சீமானுக்கும் லாரன்ஸ்க்கும் சில ஆண்டுகளாகவே பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ரஜினியின் பின்னே மறைந்துகொண்டு சீமானை லாரன்ஸ் தாக்குவது சரிதானா..?

இப்போது ரஜினிக்கு ஆதரவாக களத்தில் நிற்பவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஆம், லாரன்ஸ், கராத்தே தியாகராஜன், ஐசரி கணேஷ் போன்றவர்கள்தான் ரஜினியின் தளபதிகளாம். இப்படிப்பட்ட தளபதிகள் தேவைதானா என்று ரஜினி இப்போதே யோசிக்க வேண்டும்.