தீராத உடல் எடை பிரச்சனை..! தீவிர முயற்சியில் இறங்கிய பெண்! ஆனால் தொடையில் மட்டும் கொழுப்பு குறையாத விநோதம்! அதிர்ச்சி காரணம்!

லாஸ் ஏஞ்சலீஸ்: தொடைகளில் காணப்படும் அதிக கொழுப்பால் அமெரிக்க பெண் ஒருவர் விநோத பாதிப்பை சந்தித்துள்ளார்.


லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர் வில்லியம்ஸ். 44 வயதான இவருக்கு, Lipedema என்ற  உடல் பாதிப்பு உள்ளது. இதன்காரணமாக, 10 வயதில் இருந்தே அவரது தொடைகளில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து, பார்ப்பதற்கு விநோதமான தோற்றத்தை அளித்திருக்கிறது. தொடைகள் தொள தொளவென வழக்கமான தோற்றத்தைவிட பெரிய அளவில் காணப்படுவதால் இந்த பெண் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளார்.  

இருந்தாலும் தனது சோகத்தை மறைக்க வேறு வழியின்றி தன்னைப் பற்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வித விதமான போஸ்களில் தொடையழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை ஜெனிஃபர் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த பலரும் 'வெண்ணெய்க்கட்டி போல உள்ளீர்கள் டோலி,' என கமெண்ட் தட்ட அது ஜெனிஃபரை குஷியடைய செய்துள்ளது.

அவர்கள் கிண்டல் செய்தாலும், மனதிற்கு ஒருவித தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதென்றும், சமூக ஊடகங்களின் உதவியால் தனது கவலையை நாளுக்கு நாள் மறக்க தொடங்கியுள்ளதாகவும் ஜெனிஃபர் குறிப்பிடுகிறார்.