அதான் புருசன் வீட்ல இல்லையே வாடி..! நண்பனின் மனைவியை உறவுக்கு அழைத்து 33 வயது ராமச்சந்திரன் அரங்கேற்றிய விபரீதம்!

தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்த அடுத்தவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம், மன்னிக்கவும் ! வெந்நீர் ஊற்றிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.


எத்தனை என்கவுன்ட்டர் போட்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சீண்டல்கள் ஓயப்போவதில்லை என்பது போல்தான் நாள்தோறும் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பாலியல் குற்றங்கள் பெண்கள் மீதே பழி சுமத்தப்படுகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பாக்யராஜ் ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது என்ற பழமொழி சொன்னார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விளக்கம் கேட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

நெல்லையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஸ்வலட்சுமணனை பிரிந்து வாழ்ந்து வருகிறார் கலையரசி என்பவர். தற்போது கலையரசி வெள்ளந்தாங்கியில் சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். குடும்ப நண்பரான சாத்தான்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அடிக்கடி கலையரசி வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாம்.  

இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலையரசியை ராமச்சந்திரன் கையை பிடித்து இழுத்தாக கூறப்படுகிறது. இதை கலையரசி மறுத்ததால், அவரை அவதூறாக பேசி தாக்கியதாகவம், பின்னர் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து வந்து கலையரசி மீது ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த கலையரசி அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த உடன் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

பின்னர் சத்யா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் தப்பியோடிய ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.