பெண் இன்ஸ்பெக்டர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

உணவு மற்றும் மருந்துத் துறையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் பெண், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


பஞ்சாப் மாநிலம், கரார் நகரைச் சேர்ந்தவர் நேஹா சோரி. இவர், அந்த மண்டலத்திற்கான மருந்து மற்றும் உணவு கெமிக்கல் பரிசோதனை மையத்தின் இன்ஸ்பெக்டராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் அலுவலகத்தில் இருந்தபோது, வெள்ளிக்கிழமை ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவரை சுட்டுக் கொன்ற நபர், தனது கைத்துப்பாக்கியுடன் தப்பிக்க முயன்றான். எனினும், போலீசார் சுற்றி வளைத்ததை தொடர்ந்து, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தான். இருந்தபோதிலும், லேசான காயங்களுடன் அவனை உயிருடன் போலீசார் பிடித்தனர்.

இதன்பேரில், அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அந்த பெண் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும், விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உறுதி அளித்துள்ளார். இதனிடையே நேஹாவின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

நேஹாவை சுட்டுக் கொன்றவன் பல்வீந்தர் சிங் என்பதும் அவனது மருந்துக் கடையி அண்மையில் நேஹா ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட மருந்துகளை பறிமுதல் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக பல்வீந்தர் நேஹாவை சுட்டுக் கொனற்து தெரியவந்துள்ளது.

கடமையை செய்ததற்காக நேஹாவை பல்வீந்தர் சுட்டுக் கொன்றது கேட்போரை அதிர வைத்துள்ளது. மேலும் நேஹாவின் குடும்பத்தினர் குறித்த தகவல் அனைவரையும் உறைய வைப்பதாக இருக்கிறது.