வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

டெல்லி: விலங்குகளை பற்றி அவ்வப்போது வியப்பான தகவல்கள் அல்லது வீடியோ காட்சிகள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது.


இதன்படி, ஒரு வியப்பான வீடியோ காட்சி குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.  ஆம், அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று, நாயுடன் சண்டையிட்டுள்ளது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

வனப்பகுதிக்குள் நடமாடும் நாயை திடீரென பெண்சிங்கம் ஓடிவந்து தாக்குகிறது. இதன்போது, அந்த நாயும் சுதாரித்துக் கொண்டு, பெண் சிங்கத்தை திருப்பி தாக்குகிறது. இப்படி சில விநாடிகள் சண்டை நீடித்த நிலையில், நாய் அங்கிருந்து வெற்றிகரமாக, அதாவது. உயிருடன் விடைபெற்றது.

பெண் சிங்கமோ, குட்டி நாய் நம்மை எதிர்த்து சண்டையிட்டுவிட்டதே, என்ற. விரக்தியில் அமைதியாக அந்த இடத்தை விட்டு கிளம்பியது. நாயிடம் பெண் சிங்கம் தோற்ற இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.