கேரளாவில் 6 கொலை..! திருப்பூரில் 3 கொலை..! சீரியல் கில்லர் பெண்களின் பகீர் மறுபக்கம்!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சொத்துக்காக தனது குடும்பத்தினர் 3 பேரை கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் தனக்கு சொந்தமாக பைனான்ஸ் நடத்தி வருகிறார். மற்றும் இவரது மனைவி வசந்தாமணி ஆகிய இருவரும் தனது மகனின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக வெள்ளகோவிலில் உள்ள அவரது அக்காள் கண்ணம்மாள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த நிலையில் தனது ஆக்களுடம் செல்வராஜ் சொத்துக்காக தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.இதையடுத்து கண்ணம்மாள் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மாள் அவர்கள் இருவரையும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் இக்கொலையை மறப்பதற்காக தனது மருமகன் நாகேந்திரன் உதவியுடன் அவர்களது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் மகன் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கண்ணம்மாள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்களை கொலை குற்றப் பிரிவின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் நாகேந்திரன் என்பவரது தங்கையான நாகேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தாயை காணவில்லை என காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.  

இதையடுத்து அந்த புகாரையும் காவல்துறையினர் விசாரித்தபோது கண்ணம்மாள் அந்த கொலையையும் செய்துள்ளார் என்ற சந்தேகத்தோடு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது நாங்கள் தான் ராஜாமணியையும் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மகள் பூங்கொடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் கூறியதாவது எனக்கும் எனது மாமியார் ராஜாமணிக்கும் ஒத்து வராது எனவும் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார் சமயம் வந்தபோது தனது தாய் கண்ணம்மாள் மற்றும் கணவருடன் சேர்ந்து திட்டமிட்டு மாமியார் ராஜாமணியை கொலை செய்தோம் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ராஜாமணியின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கேரளாவில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்னிலையில் அதேபோல் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.