பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! சுகப் பிரசவம்! ஆனால் குழந்தையை கையில் கொடுத்த போது டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்! இடிந்து நொறுங்கிய இளம்பெண்!

நியூயார்க்: குழந்தை பிறந்த உடனே மார்பக புற்றுநோய் சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் கதைதான் இந்த செய்தி.


ஒக்லாஹாமாவில் உள்ள கோரி பகுதியை சேர்ந்தவர் புரூக் டெய்லர். 32 வயதாகும் இவர், கடந்த மே மாதத்தில் வயிற்றில் எதோ கட்டி வளர்வது போல உணர்ந்தார். இதன்பேரில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர் கூற அதிர்ந்துபோனார். இருந்தாலும், தனக்கு புற்றுநோய்க்கட்டி உடலில் இருப்பதுபோன்றே டெய்லர் அவ்வப்போது பீதியடைந்து காணப்பட்டிருக்கிறார்.  

ஒருவழியாக, சமீபத்தில் அவருக்கு பிரசவம் ஏற்பட்டது. நல்ல முறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக, பிறந்த குழந்தை ஒருபுறம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க, டெய்லருக்கு கீமோதெரபி மற்றும் மாஸ்டெக்டமி செய்யப்பட்டது. மார்பகம் அகற்றப்பட்ட நிலையில், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட குடுக்க முடியாத அவல நிலைக்கு டெய்லர் தள்ளப்பட்டுள்ளார். எனினும், மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார் என்று டாக்டர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  

பிரசவம் நடந்த கையோடு தைரியமாக புற்றுநோயை எதிர்கொண்டு, மார்பகத்தை அகற்ற முன்வந்த டெய்லருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.