ஒரே அறையில் முன்பின் அறிமுகம் இல்லா ஆணுடன் தங்க வைக்கப்பட்ட பெண்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க!

டொரண்டோ: முன்பின் தெரியாத ஆணுடன் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டதாக, பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்.


எலிசபெத் கோபி என்ற 71 வயது மூதாட்டி, கனடாவில் இருந்து பிரான்ஸ் செல்லவிருந்தார். ஆனால், அவரது விமானம் தாமதமான காரணத்தால் மூதாட்டியை சம்பந்தப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனம், தனி அறை ஒன்றில் தங்க வைத்துள்ளது.

அவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ள நிலையில், அந்த அறையில் இருந்த ஒரே ஒரு படுக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும்படி ஏர் கனடா நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தனது மகளிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார். 

அந்த பெண் உடனடியாக ஏர் கனடா நிறுவன ஊழியர்களை தொடர்புகொண்டு வாதம் செய்ததன் காரணமாக, மூதாட்டிக்கு ஓட்டல் ஒன்றில் தங்கும் அறை புக் செய்து, கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது தாய் சமூக ஊடகங்களிலும் தகவல் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஏர் கனடா, இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளது.