டேட்டிங்..! லிவிங் டுகெதர்..! இயற்கைக்கு மாறான உறவு..! கால் செண்டர் பெண் ஊழியருக்கு ஆண் அதிகாரியால் நேர்ந்த பரிதாபம்!

குருகிராம்: பணியை காரணம் காட்டி, உயர் அதிகாரி ஒருவர் கடந்த பல மாதங்களாக, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக, பெண் ஊழியர் புகார் தெரிவித்துள்ளார்.


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணிற்கு 27 வயது. ஏற்கனவே திருமணமான நிலையில், அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, ஹரியானா மாநிலம், குருகிராமில் அமைந்துள்ள தனியார் பிபிஓ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த குறிப்பிட்ட பெண்ணை, அவரது உயர் அதிகாரி பல்முகுந்த் மிஸ்ரா பாலியல் ரீதியாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்.  

மிஸ்ராவுடன் உடல்ரீதியான இச்சைக்கு ஆசைப்பட்ட அப்பெண், அவருடன் இணைந்து, நியூ பாலம் விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கே இருவரும், கடந்த சில மாதங்களாக, லிவ்-இன் டுகெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதன்போது, மிஸ்ரா, அப்பெண்ணை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததோடு, முறைகேடான பாலியல் உறவில் ஈடுபடவும் வலியுறுத்தி தொந்தரவு செய்ய தொடங்கியிருக்கிறார். இவை அனைத்தையும் சகித்துக் கொண்ட அப்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்த, அதனை மிஸ்ரா நிராகரித்துவிட்டாராம்.  

இதன்பேரில், குறிப்பிட்ட பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். திருமண ஆசை காட்டி மிஸ்ரா தன்னை பல மாதங்களாக பாலியல் ரீதியாக சீரழித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.