குளியலறையில் இருந்து வந்த அலறல்! ஹீட்டரில் குளித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

வாட்டர் ஹீட்டரை கவனக்குறைவாக பயன்படுத்திய பெண் ஒருவர் சேலம் அருகே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வசித்து வருபவர் சின்ன பொண்ணு. இவர் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைப்பதற்கு வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார். 

பிறகு ஸ்விட்சை அணைக்காமல் நேரடியாக வாட்டர் ஹீட்டர் போட்டு இருந்த வாக்கில் தண்ணீர் எடுக்க முயற்சித்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சின்ன பொண்ணுவின் அலறல் சத்தம் கேட்ட அவரது கணவர் விரைந்து வந்து பார்க்கையில், மயங்கி கிடைந்ததைக் கண்டு அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

அங்கு பரிசோதித்ததில் வரும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னப்பொண்ணுவின் குடும்பம் தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

இது குறித்து பேசிய அவரது கணவர் கூறுகையில், கவனக் கோளாறினால் தற்போது எனது மனைவியை நான் இழக்க நேரிட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார். 

வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் குடும்பத்தினர் ஒன்றுக்கு இருமுறை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது. மேலும் தரமான இந்திய தரச்சான்றிதழ் பெற்ற பொருளை வாங்கி பயன்படுத்துமாறு மின்சார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.