2 அடி கட்டுவீரியன் பாம்பு! சுமித்ராவின் உடல் முழுவதும் விஷம்! செயல் இழந்த மூளை! உறைய மறுத்த ரத்தம்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

சென்னை கே.கே.நகரில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.


சென்னை கே.கே.நகரில் சினிமா நிறுவனத்தில் கார்பண்டராக பணிபுரியும் பழனி என்பவர் தனது மனைவி சுமித்ரா என்பவருடன் வசித்து வந்தார் 

சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பழனி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பின்னர் மழை நின்றவுடன் தண்ணீர் வடியத் தொடங்கியது. மழை நீர், கழிவு நீரோடு கலந்து வீட்டிற்குள் வந்திருந்ததால் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் சுமித்ரா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஷுவை எடுத்தபோது அதில் ஒரு பாம்பு இருந்ததை பார்த்து அலறினார்.

உடனடியாக ஷுவை கீழே போடுவதற்குள் அந்த பாம்பு சுமித்ராவை கடித்துவிட்டது. இதை அடுத்து வலியால் துடித்த சுமித்ரா மண்ணடியில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பு கடித்தவுடன் சுமித்ராவை கே.கே.நகரில் இருந்து 20 கிமீ தூரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலையும் அவர் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

பாம்பு கடித்தபோதே உடம்பு, நரம்பு மண்டலம் மொத்தமும் விஷம் ஏறியதாலும், சிகிச்சைக்காக நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் சுமித்ராவின் உயிரை பறித்தவிட்டது. பாம்பு கடிக்கான மருந்து கே.கே.நகர் அரசு மருத்துவமனையிலும் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.